பரிசளிப்பு விழா
விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரியில் பரிசளிப்பு விழா
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான இளந்தனித்திறமை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரியின் நுண்கலை ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி வரவேற்றார். கல்லூரியின் மாணவியர் புல முதன்மையர் ராஜேஸ்வரி தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரியின் துணை முதல்வர் செல்வி, பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பரிசு பெற்றவர்கள், கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினர். முடிவில் நுண்கலை தலைவர் மோனிஷா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story