மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சியகத்துக்கு கிடைத்த விருது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சியகத்துக்கு டெல்லியில் "உலகளாவிய வடிவமைப்பு" விருதுகள் வழங்கப்பட்டது
சென்னை,
சென்னை காமராஜர் சாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.6.2022 அன்று திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகமானது மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட உதவி உபகரணங்கள் மற்றும் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் அங்கு வருகை புரிபவர்களுக்கு அவர்கள் தனிச்சையாக வாழ்வதற்கு ஏதுவாக காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்திற்கு டெல்லியில் "உலகளாவிய வடிவமைப்பு" விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதினை நலத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
Related Tags :
Next Story