தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு விருது


தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு விருது
x

தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு விருது வழங்கப்பட்டது

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

போலீஸ்துறை, தீயணைப்புத்துறையில் சிறப்பாக பணிபுரிபவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இந்த சிறப்பு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு போலீஸ்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு விருதுகளை வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் தஞ்சை மாவட்டத்தில் தனிப்பிரிவில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சி.ஜெ.ராஜா கடந்த 2019-ம் ஆண்டுக்கான இந்திய குடியரசு தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான பதக்கமும், இதே தனிப்பிரிவில் பணிபுரியும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.ஜெயக்குமார் கடந்த 2021-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் அண்ணா பதக்கமும் பெற்றனர்.


Next Story