மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுவிண்ணப்பிக்க 26-ந் தேதி கடைசிநாள்


மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுவிண்ணப்பிக்க 26-ந் தேதி கடைசிநாள்
x
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் 
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 3:30 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்கள் மாநில விருது பெற வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கடலூர்


இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவைபுரிபவர்கள், சிறப்பாக சேவைபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சரால் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டும் 15.8.2023 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் தமிழக அளவில் சிறப்பாக சேவைபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள், தேர்வு குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த சமூகப்பணியாளருக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும் அளிக்கப்பட உள்ளது.

26-ந் தேதி கடைசிநாள்

எனவே இந்த விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்112, தரைத்தளம், புதிய கலெக்டர் அலுவலக வளாகம், கடலூர் அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து உரிய அனைத்து சான்றிதழ்களுடன் வருகிற 26-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story