குப்பை மேலாண்மையில் சிறந்த செயல்பாடு; தூய்மை பணியாளர்கள், கல்வி நிறுவனங்களுக்கு விருது
பழனி நகராட்சியில் குப்பை மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள், கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
திண்டுக்கல்
பழனி நகராட்சியில் தூய்மை இயக்கம் சார்பில், 'என் குப்பை என் பொறுப்பு' என்ற திட்டத்தின் கீழ், பொதுமக்கள், வணிக, கல்வி நிறுவனங்களில் குப்பை மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குப்பை மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள், வணிக, கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது.
தனியார் மண்டபத்தில் நடந்த விழாவுக்கு நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையர் கமலா, துணைத்தலைவர் கந்தசாமி, நகர்நல அலுவலர் மனோஜ்குமார், பொறியாளர் வெற்றிச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story