தலைமை ஆசிரியருக்கு விருது
கோடியக்காடு சுந்தரம் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது
வேதாரண்யம்:
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்திட்டம் மூலம் 2022-23-ம் கல்வி ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்ந்த சிறந்த கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது வழங்கப்பட்டது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட அளவில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய கோடியக்காடு சுந்தரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதையடுத்து
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர், இந்த விருதை பள்ளியின் தலைமை ஆசிரியர் நீலமேகத்திற்கு வழங்கினர். மேலும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் ஆறுமுகம், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் மீனாம்பாள் ஆகியோருக்கு சுழற்கேடயம், பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினர். பின்னர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பாராட்டினர்.