சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பரிசு -டி.ஐ.ஜி. வழங்கினார்


சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பரிசு -டி.ஐ.ஜி. வழங்கினார்
x

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி.பரிசு வழங்கினார்.

திருப்பத்தூர்

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி.பரிசு வழங்கினார்.

வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி.முத்துசாமி திருப்பத்தூர் வந்தார். இங்கு அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் முன்னிலை வகித்தார்.

இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர் லதா, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், ஏட்டு ராதாகிருஷ்ணன், செண்பகவல்லி ஆகியோருக்கு பரிசு வழங்கி டி.ஐ.ஜி.முத்துசாமி பாராட்டினார்.

அதைத்தொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறை, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, பண்டகப்பிரிவு, விரல் ரேகை பிரிவு மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆகிய பிரிவுகளில் அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் மனுக்கள் மீதான விசாரணை, நிலுவையிலுள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்தும், நிலுவையிலுள்ள மனுக்களை உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண உத்தரவிட்டார். வழக்கு கோப்புகளை பார்வையிட்டு துரித நடவடிக்கை எடுக்கவும், பதிவான வழக்குகளில் விரைந்து புலன் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கை கோர்ட்டில் நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுதர வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்களிடையே நற்பெயர் பெரும் வகையில் நல்ல முறையில் பணிசெய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.


Next Story