தூத்துக்குடி கமாக் பள்ளிக்கு விருது


தூத்துக்குடி கமாக் பள்ளிக்கு விருது
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கமாக் பள்ளிக்கு விருது கிடைத்துள்ளது.

தூத்துக்குடி

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு எக்ஸிகியூட்டிவ் ஷிப் மேனேஜ்மென்ட் கம்பெனி என்ற நிறுவனம செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் 12 நகரங்களில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் பள்ளிக்கூடங்களில் மேலாண்மை குறித்து ஆய்வு நடத்தி விருது வழங்கி வருகிறது. அதன்படி இந்தியாவில் உள்ள அந்த நிறுவன அதிகாரி ராஜ்குமார் தலைமையிலான குழு இந்தியாவில் உள்ள துறைமுக நகரங்களில் இயங்கி வரும் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த குழுவினர் பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவரின் ஒட்டு மொத்த வளர்ச்சி, ஆசிரியர்கள், பெற்றோரின் கவனிப்பு, கற்றல் சூழல், பொதுமக்களின் மதிப்புரைகள் போன்ற பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்தனர். அனைத்து பள்ளிகளும் தங்கள் திறமையை அளவிடுவதோடு, பெற்றோருக்கு அவர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதும் கணக்கிடப்பட்டது. இதில் தூத்துக்குடியில் இயங்கி வரும் கமாக் பள்ளி 88 சதவீதம் மதிப்பெண்களை பெற்று விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை எக்ஸிகியூட்டிவ் ஷிப் மேனேஜ்மென்ட் கம்பெனி அதிகாரி ராஜ்குமார், பள்ளி செயலாளர் சிந்துஜா மதன், கமாக் மழலையர் பள்ளி தலைமை ஆசிரியை இன்பண்டா செபாட்னி, கமாக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் மேகலா ராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து சிங்கப்பூர் நிறுவனம் சார்பில் கமாக் பள்ளியில் அகில இந்திய திறனாய்வு தேர்வும் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு வணிக கடற்படையில் சேர வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story