அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது


அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது
x

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கே.எஸ்.சி.வெல்பர் அசோசியன் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளராக விருது பெற்ற விந்தன் ஸ்டாலின் ஆகியோருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் நடைபெற்றது. விழாவிற்கு பழனியப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகி கணேசன் வரவேற்றார். நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சுப்பையன், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற அகிலா, மகாலட்சுமி மகிளேஸ்வரி, நீலகண்டன், கவி, கீர்த்தனா, ஹரிணி, கீர்த்தனா, லாவண்யா ஆகிய மாணவ-மாணவிகளுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளராக விருதுபெற்ற விந்தன் ஸ்டாலின் ஆகியோர்களை பாராட்டி பதக்கம் மற்றும் விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பழனியப்பன், குணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணேசன் நன்றி கூறினார்.


Next Story