திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி


திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்

கொரடாச்சேரி அருகே உள்ள அத்திக்கடை, ஆய்க்குடி, அம்மையப்பன், மணக்கால் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் 'நம்ம ஊரு சூப்பரு' இயக்கம் மூலம் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ, மாணவிகளுக்கு தூய்மை பாரத இயக்க ஊக்குவிப்பவர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story