வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வளர் இளம் பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் கம்பர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குத்தாலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருத்திகா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தேரழுந்தூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அக்சய்குமார், குழந்தை பாதுகாப்பு நலத்துறையை சேர்ந்த ஆரோக்கியராஜ், வக்கீல் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இளம் பெண்களுக்கு ரத்த சோகை என்றால் என்ன? அதன் அறிகுறிகள், ரத்த சோகையை எப்படி தடுப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் கலையரசி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராம்குமார் மற்றும் குழந்தைகள் மைய பணியாளர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.