மருந்தாளுனர்கள் தின விழா
மருந்தாளுனர்கள் தின விழா நடந்தது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் மருந்தாளுனர் தின விழா நடந்தது. விழாவிற்கு மருந்து கிடங்கு அலுவலர் முரளி தலைமை தாங்கினார். தலைமை மருந்தாளுனர்கள் ஹேமலதா, மணிமேகலை, சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி மருந்தாளுனர் செல்வகுமார் வரவேற்றார். இதில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன், துணை இயக்குனர் குமரன்குருபரன், தமிழ்நாடு மருந்தாளுனர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மருந்துகள் ஆய்வாளர் அரவிந்தன், முதன்மை குடிமுறை மருத்துவ அலுவலர் பானுமதி, மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மருந்தாளுனர் தேவராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story