மின்சார சிக்கன விழிப்புணர்வு


மின்சார சிக்கன விழிப்புணர்வு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:16:49+05:30)

காரைக்குடி எல்.எப்.ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் மின்வாரியம் சார்பில் மின்சிக்கனத்தை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி எல்.எப்.ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியில் மின்வாரியம் சார்பில் மின் சாதனங்களை எவ்வாறு பயன்படுத்தி மின்சிக்கனத்தை பின்பற்றுவது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. செஞ்சை புனித தெரசாள் ஆலய பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ வரவேற்றார். நிகழ்ச்சிக்கு மின்வாரிய செயற்பொறியாளர் லதாதேவி தலைமை தாங்கினார். மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் கணேசன், முத்துக்கிருஷ்ணன், உதவி மின் பொறியாளர் அப்துல்சலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளி பொறுப்பு ஆசிரியர் பீட்டர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story