குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு


குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
x

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையர் பார்த்தசாரதி, துணை வட்டாட்சியர் கோதண்டராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்துலட்சுமி கூறுகையில், பள்ளிக்கு செல்லும்போது புத்தகப்பையில் புகையிலை பொருட்களை மறைத்து எடுத்து சென்று பள்ளிக்குள் வைத்து மாணவர்கள் அதை பயன்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்களால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். இதில் குழந்தைகள் நல குழு உறுப்பினர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்்து கொண்டனர்.


Next Story