குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், சத்திரமனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, அனைத்து மகளிர் போலீஸ் நிலைய ஏட்டு ஜான் பரிமளா மேரி ஆகியோர் மாணவ-மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அவர்கள் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம், இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.