போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
நாட்டறம்பள்ளி அருகே போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் சார்பில் நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நடைப்பெற்றது.
நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் தலைமை தாங்கி போதைப்பொருள் தடுப்பு குறித்தும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்தும் மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் நாட்டறம்பள்ளி போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story