மேல்விஷாரம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு


மேல்விஷாரம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு
x

மேல்விஷாரம் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

ஆற்காடு

மேல்விஷாரம் நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் 'என் குப்பை, என் பொறுப்பு' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டன.

மேலும் வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் நகரத் தூய்மைக்கு முன்மாதிரியாக செயல்பட்டதற்கு நகர மன்ற தலைவர் எஸ்டி.முகமது அமீன் தலைமையில் நகர மன்ற துணைத் தலைவர் குல்சார் அஹமத் பொறியாளர் பாபு ஆகியோர் முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதில் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் உமாசங்கர், நகராட்சி உதவியாளர் கருணாகரன், தூய்மை பாரத இயக்கம் மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story