சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு


சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 18 Feb 2023 12:15 AM IST (Updated: 18 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

லக்கிநாயக்கன்பட்டியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

வடபொன்பரப்பி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் லக்கி நாயக்கன்பட்டியில் வாகன ஓட்டிகளுக்கு சாலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மேலும் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர்களை போலீசார் ஒட்டினர். தொடர்ந்து வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவதை தவிர்க்க வேண்டும், சாலை விதிகளை பின்பற்றுவது மட்டுமின்றி வளைவு மற்றும் எச்சரிக்கை பலகை இருக்கும் இடங்களில் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்ற வேண்டும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், ஹெல்மெட் அணிவதால் உயிரை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள். போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story