தண்டவாளங்களை பாதுகாப்பாக கடப்பது குறித்து விழிப்புணர்வு


தண்டவாளங்களை பாதுகாப்பாக கடப்பது குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாளங்களை பாதுகாப்பாக கடப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

தண்டவாளங்களை பாதுகாப்பாக கடப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே ஊராட்சிக்குட்பட்ட 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் நாட்டறம்பள்ளி சாலையை கடந்து செல்லவும் திருப்பத்தூர் சாலையை கடக்கவும் ரெயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டுள்ள போது ஒரு சிலர் கேட் திறப்பதற்கு முன்பு தண்டவாளப்பாதையை கடந்து செல்கின்றனர்.

இதனால் சில சமயங்களில் அவ்வழியாக வரும் ரெயில்களில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் தண்டவாள பகுதியில் ஆடு மாடுகள் கடந்து செல்லும் போது ஓடும் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலிஷ் நிலையம் சார்பில் அப்பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சோமநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில் இங்குள்ள ெரயில் தண்டவாளத்தில் யாரும் அஜாக்கிரதையாக கடக்கக் கூடாது. தண்டவாள பாதையில் ஆடு, மாடுகள் போன்றவற்றை மேய்க்க கூடாது. விதிமுறைகளை மீறி விரோதமான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது ரெயில்வே காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் தண்டவாளத்தை கவனமுடன் கடக்க வேண்டும். பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

=========


Next Story