போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு


போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
x

போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர்

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமாரின் உத்தரவின்படி, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களின் அருகே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளை போலீசார் தங்களது போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையத்தின் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் கூறுகையில், போலீஸ் நிலையத்தின் நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு உதவி மையம் குறித்தும், நமக்கு பாதுகாப்பு தேவைப்படும் போது எந்த நேரத்திலும் இலவச உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்ற திட்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டது மிகவும் பயனுள்ளதாக உள்ளது, என்றனர்.


Next Story