போதை பொருட்கள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு


போதை பொருட்கள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
x

போதை பொருட்கள் தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி மாவட்டத்தில் புகையிலை மற்றும் குட்கா போதை பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற வகையில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் மாவட்ட போலீசாரால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட போலீசாரால் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்து விரிவாக எடுத்து கூறப்பட்டது.


Next Story