குற்றத்தடுப்பு சம்பந்தமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு


குற்றத்தடுப்பு சம்பந்தமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு
x

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்பந்தமாக பள்ளிகளில் ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டத

திருவண்ணாமலை

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்பந்தமாக பள்ளிகளில் ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டத

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன் மேற்பார்வையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியின் போது போலீசார் மூலம் மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தல், குழந்தை திருமணத்தை ஒழித்தல், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல், பெண் குழந்தைகள் கல்வியை தடையின்றி தொடருதல், நல்ல தொடுதல் - கெட்ட தொடுதல், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு உதவி எண்கள் பயன்படுத்தும் வழிமுறைகள், காவல் உதவி செயலி பயன்படுத்தும் முறைகள் போன்ற பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்தார்.



Next Story