நரசிங்கபுரம் கிராம மக்களிடையே தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு


நரசிங்கபுரம் கிராம மக்களிடையே தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு
x

நரசிங்கபுரம் கிராம மக்களிடையே தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

தமிழ்நாடு அரசு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அதிகாரிகள் பேரம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வாரம் முழுவதும் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நேற்று பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மக்கள் தங்கள் வீடுகளில் கேஸ் சிலிண்டரால் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அதை கையாள்வது என்பதைப் பற்றியும், பாம்புக்கடி, மின்சார தீ விபத்து, தீ விபத்துகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும் பயனுள்ள வகையில் விரிவாக விளக்கினர். இதைதொடர்ந்து பொதுமக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரச்சுரங்களை வழங்கினார்கள்.


Next Story