காவல் செயலி குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு
காவல் செயலி குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு
அரியலூர்
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் அரியலூர் நகர காவல்துறை சார்பில் அரியலூர் பஸ் நிலையத்தில் காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு மற்றும் பதிவிறக்கம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு காவல் செயலியின் நன்மைகள், பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து எடுத்துக்கூறினர். எவ்வித ஆபத்தில் இருந்தாலும் காவல் செயலியை பயன்படுத்தினால் தங்களை பாதுகாக்கலாம், அருகில் உள்ளவர்களையும் பாதுகாக்கலாம். எனவே ஒவ்வொரு பெண்களும் காவல் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதில் ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு காவல் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டனர்.
Related Tags :
Next Story