விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி


விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
x

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

கரூர்

கரூர் திருவள்ளுவர் மைதான திடலில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 3-ம்நாள் நிகழ்ச்சியாக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் நாடு மற்றும் கிராம பாடல்களுக்கு நடனம் ஆடியும், பரதம், கும்மி அடித்தும், வில்லுபாட்டு பாடியும், குழு நடனம் ஆடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் சக்திவேல் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story