வாகனங்களில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு


வாகனங்களில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:16:45+05:30)

வாகனங்களில் எச்சரிக்கை ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி முதல் வருகிற 17-ந்் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதில் சாலை விதிகளை கடைபிடித்தல், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிதல், காரில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணிதல், அதிவேகத்தில் வாகனங்களை இயக்கக்கூடாது என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் கோத்தகிரி போக்குவரத்து காவல்துறை சார்பில், வாகனங்களில் எச்சரிக்கை ஸ்டிக்கர்கள் மற்றும் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார், இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கலந்துகொண்டு இருசக்கர, 4 சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் விளக்கி பேசியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story