விழிப்புணர்வு முகாம்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
தென்காசி
கடையம்:
ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் சுகாதார மக்கள் இயக்கம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கினர். ஸ்வச்தா செயலி தொடர்பாக மக்கள் அனைவருக்கும் பதிவிறக்கம் செய்து தங்களது கோரிக்கைகளை பதிவு செய்திட விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளி குழுமங்களின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி தலைவர் சரசு சங்கர், துணை தலைவர் சங்கர், செயல் அலுவலர் பூதப்பாண்டி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முத்து வேலன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டி, பள்ளி பசுமைப்படை மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story