விழிப்புணர்வு முகாம்
அரசகுளம் கிராமத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
விருதுநகர்
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பாக அரசகுளம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரிமுத்து தொடங்கி வைத்தார். மேலும் விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் கோயில் ராஜா, துணை இயக்குனர் காலீஸ்வரன், விருதுநகர் கோட்ட உதவி இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினார். முகாமில் காரியாபட்டி கால்நடை உதவி மருத்துவர் கணேஷ், கால்நடை ஆய்வாளர்கள் சத்யா மற்றும் சந்தான லட்சுமி முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மற்றும் கன்று வளர்ப்பு பிரிவில் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story