விழிப்புணர்வு முகாம்
சாத்தூர் அருகே விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
விருதுநகர்
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா நல்லமுத்தான்பட்டி ஊராட்சி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணைஇயக்குனர் கோயில்ராஜா முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ராஜராஜேஸ்வரி மேற்பார்வையின் கீழ் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. கன்றுகளை சிறப்பாக பராமரித்த விவசாயிகளுக்கும், சிறந்த விவசாய மேலாண்மை முறைகளை பின்பற்றிய விவசாயிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடை உதவி மருத்துவர் அரவிந்தன், பாலசுப்பிரமணியன், கால்நடை ஆய்வாளர் ஜெயகணேஷ், கால்நடை பராமரிப்புத் துறை உதவியாளர் ராமேஸ்வரி மற்றும் விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story