விழிப்புணர்வு முகாம்


விழிப்புணர்வு முகாம்
x

விழிப்புணர்வு முகாம் நடந்தது.

கரூர்

பள்ளப்பட்டியில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளப் பட்டி நகராட்சி தலைவர் எஸ்.ஏ.முனவர்ஜான் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கே.பி. குமரன் முன்னிலை வகித்தார். சிறுபான்மை மக்களுக்கு வங்கி கடன், தொழில் தொடங்க கடன், மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் உள்ளிட்ட பலதரப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் பற்றி ஒவ்வொரு துறை வாயிலாக எடுத்துக் கூறப்பட்டது.

இதில், கரூர் மாவட்ட கல்வி அலுவலர் கண்ணிச்சாமி, கரூர் மாவட்டமுன்னாள் மருந்து வணிகர்கள் சங்க ஆலோசகர் பாப்புலர் அபுதாகிர், தேசிய விலங்குகள் நல வாரிய உறுப்பினரும், கரூர் மாவட்ட சிறுபான்மையினர் நல கருத்தாளருமான முகமது ஹனீப் ஷகில், தி.மு.க. நகர பொறுப்பாளர் வசீம் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story