கள்ளக்குறிச்சியில் ஆதிதிராவிடர் உள்ளாட்சி பிரதிநிதி உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு முகாம்


கள்ளக்குறிச்சியில் ஆதிதிராவிடர் உள்ளாட்சி பிரதிநிதி உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 24 April 2023 12:15 AM IST (Updated: 24 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உள்ளாட்சி பிரதிநிதி உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உள்ளாட்சி பிரதிநிதி உறுப்பினர்களுக்கு தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின மையம், திறன்மிகு தொழில் முனைவோர் மற்றும் தொழில் துறை மேம்பாட்டு கூட்டமைப்பு, மாவட்ட தாட்கோ துறையின் சார்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனிஸ்வரன், மாவட்ட தாட்கோ மேலாளர் ஆனந்தமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட தாட்கோ துறையின் மூலம் ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 11 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 12 தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய அட்டையையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

குறைகள் நிவர்த்தி கூட்டம்

மக்கள் பிரதிநிதிகளான உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற கூடிய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்கள், உயர் கல்வி சார்ந்த படிப்புகளை இம்மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் .கிராம வளர்ச்சிக்கு தேவையான தன்னிறைவு திட்டங்களை வகுத்து செயல்படுத்திட வேண்டும். அதற்கான உதவிகளை உங்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்கி உறுதுணையாக இருக்கும். அடுத்த தலைமுறைகளை சிறந்த தலைமுறைகளாக உருவாக்கிட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு மிக முக்கியமான பங்காகும்.எனவே பொறுப்பு மற்றும் கடமையுடன் பணியாற்ற வேண்டும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எதிர்வரும் காலங்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை விழிப்புணர்வு மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யும் கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். முகாமில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் ரத்தினமாலா, திறன்மிகு தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு நிறுவன ஒருங்கினைப்பாளர் சுந்தரவடிவேல், துணைத்தலைவர் முத்துக்குமாரசாமி, கூடுதல் முதன்மை மேலாளர் கண்ணன், தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் மைய முதுநிலை மேலாளர் ஆனந்த நாராயணபிரசாத் மற்றும் அரசு அலுவலர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story