தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்


தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
x

காட்பாடி ரெயில் நிலையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வேலூர்

காட்பாடி ரெயில் நிலையத்தில் தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படை சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் காட்பாடி ரெயில் நிலையத்தில் பணிபுரியும் சுமார் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு காட்பாடி ரெயில் நிலையத்தை தூய்மையாக பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ரெயில் நிலையங்களில் கேட்பாரற்று கிடக்கும் பொருட்கள் ஏதேனும் கண்டறிந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தினர்.


Next Story