ரிசர்வ் வங்கி சார்பில் பழங்குடி மக்களுக்கான விழிப்புணர்வு முகாம்


ரிசர்வ் வங்கி சார்பில் பழங்குடி மக்களுக்கான விழிப்புணர்வு முகாம்
x

ஏலகிரி மலையில் ரிசர்வ் வங்கி சார்பில் பழங்குடி மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஏலகிரிமலை அண்ணா கலைஞர் அரங்கத்தில் பழங்குடியினர்களுக்கான ரிசர்வ் வங்கியின் சார்பில் பழங்குடியினர் திருநாள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஏலகிரிமலையில் உள்ள பொதுமக்கள் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டனர். மக்கள் நிதி திட்டம் மக்கள் பாதுகாப்பு நோக்கி மலைவாழ் மக்களுக்கான வங்கி சேவை சிறப்பு முகாம், இல்லாம் தேடி இலவச சேமிப்பு கணக்கு மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன. மேலும் பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, ஆகிய திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு முகாமில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பிரசன்னா குமார், மண்டல துணை மேலாளர் ஹரிநாத், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண் பாண்டியன், தாட்கோ மேலாளர் அமுதா, ஆகியோர் கலந்து கொண்டு ஏலகிரி மலை பழங்குடியினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story