பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
அத்திகுன்னா அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நீலகிரி
பந்தலூர்,
பந்தலூர் அருகே அத்திகுன்னா அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மணியம்மாள் தலைமை தாங்கினார். நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது, பெண் குழந்தைகள் அனைவரும் பெற்றோர், ஆசிரியர்கள் கூறும் கருத்துகளை கேட்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெற்றோரை தவிர வேறு யாராவது பரிசு பொருட்கள் கொடுத்தால் வாங்கக்கூடாது. அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். பெண் குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதி குங்பூ, கராத்தே போன்ற தற்காப்பு கலை பயிற்சிகளை பெற வேண்டும் என்றார். முகாமில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story