உலமாக்கள் ஓய்வூதியம் பணியாளர் நலவாரியம் சார்பில் விழிப்புணர்வு முகாம
காயல்பட்டினத்தில் உலமாக்கள் ஓய்வூதியம் பணியாளர் நலவாரியம் சார்பில் விழிப்புணர்வு முகாம நடந்தது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை ஏற்பாட்டில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறை, தமிழ்நாடு வக்பு வாரியம் ஆகியவை இணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தினர். உலமாக்கள் ஓய்வூதியம், உலமாக்கள் பணியாளர் நல வாரியம், இலவச சைக்கிள், இருசக்கர வாகனத்திற்கான மானியம் மற்றும் தமிழ்நாடு அரசு முஸ்லிம்களுக்கு வழங்குகின்ற உதவி குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டு அதற்கான படிவங்கள் நிரப்பப்பட்டும், புதுப்பிக்கப்பட்டும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட துணை கலெக்டரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருமான விக்னேஸ்வரன், தமிழ்நாடு வக்பு வாரிய நெல்லை சரக ஆய்வாளர் நூர் ஆலம் இப்ராஹிம், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் கே.ஏ.எஸ்.முத்து முகம்மது ஆலிம், முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முகைதீன் தம்பி துரை, செயலாளர் வாவு சம்சுதீன், துணைச் செயலாளர் நவாஸ் அகமது, துளிர் உமர் ஹாஜியார், ஜஸ்மின் கலீல் ஹாஜியார், கைலானி, சதக் தம்பி, எல்.கே.தம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹபூப் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.