விழிப்புணர்வு பிரசாரம்


விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 22 Nov 2022 12:30 AM IST (Updated: 22 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

தேனி

தேனி மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் விழிப்புணர்வு பிரசார முகாம் கூடலூர் 6-வது வார்டு பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் நடந்தது. இதற்கு சமூகநீதி மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் தலைமை தாங்கினார். கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெண்களுக்கு திருமண வயது 18-மும், ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும் விளக்கி கூறினர். வங்கி கணக்குகளில் பண மோசடி நடந்தால் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்கலாம். இதேபோல் வேறு எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் கூடலூரில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் அறிவுறுத்தினர். முகாமில் கூடலூரில் 2 இடங்களில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை, கந்துவட்டி காரர்கள் தொல்லை ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனர். முகாமில் புள்ளியியல் ஆய்வாளர் ஆனந்த வடிவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பையா, குணா, வார்டு கவுன்சிலர் விக்னேஷ் தேவதர்ஷிணி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story