இ-வாகனம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்


இ-வாகனம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
x

திருப்பத்தூரில் இ-வாகனம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மின்சாரவாரியம் சார்பில் இ- வாகனத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிரசார வாகனத்தை திருப்பத்தூர் மேற்பார்வை பொறியாளர் ஜைனுல் ஆபுதின், தூயநெஞ்ச கல்லூரி முதல்வர் மரிய அந்தோணிதாஸ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். திருப்பத்தூர் கோட்ட செயற் பொறியாளர் அருள் பாண்டியன், திருப்பத்தூர் செயற்பொறியாளர் சம்பத் ஆகியோர் வாகனத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றி, தூய்மை இந்தியா உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இதில் மத்திய அலுவலக மற்றும் திருப்பத்தூர் கோட்ட உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story