தீயணைப்புத்துறை மூலம் விழிப்புணர்வு பிரசாரம்


தீயணைப்புத்துறை மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீயணைப்புத்துறை மூலம் விழிப்புணர்வு பிரசாரம்

விருதுநகர்

திருச்சுழி

திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் மாதவன் தலைமையில் திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இதில் பட்டாசு வெடிக்கும் போது அருகில் இல்லாமல் தள்ளி இருந்து வெடிக்க வேண்டும், எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசுகள் வெடிக்க கூடாது என மாணவ மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், தீயணைப்பு துறையினர் வெடிகளை எவ்வாறு வெடிப்பது எனவும், வெடிகளை வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி முறைகள்குறித்தும் மாணவ மாணவியருக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராஜ், தமிழாசிரியர் செல்வராஜ், ஆசிரியர் சரவணன் உள்பட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்.சி.சி. அதிகாரி கதிரேசன் மற்றும் தொழில் கல்வி ஆசிரியர் கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story