விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
விக்கிரவாண்டியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
விழுப்புரம்
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி சுங்கசாவடியில் விபத்தில்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் நடந்த இந்த பிரசாரத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் பாதுகாப்பாக எப்படி கொண்டாட வேண்டும் என்பது பற்றி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா விளக்கி பேசி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story