மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்


மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவிலில் மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

தமிழக மின்வாரியம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மின்சார சேமிப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பரமக்குடி(ஊரகம்) உதவி மின்செயற்பொறியாளர் ரெஜினாமேரி உத்தரவின்பேரில் நயினார்கோவில், வாணிவல்லம், பல்லவரேந்தல், சிறகிக்கோட்டை, அரசடிவண்டல், கங்கைக்கொண்டான், பாண்டியூர் ஆகிய பகுதிகளில் வாகனம் மூலம் மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. ஒரு யூனிட் மின்சாரம் சேமிப்பு இரண்டு யூனிட் மின் உற்பத்திக்கு சமம், நட்சத்திர குறியீடு கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்தி மின் சிக்கனம் செய்வோம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இதில் இளமின் பொறியாளர் க.ராமமூர்த்தி, நயினார்கோவில் பணியாளர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story