ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு: மாநகராட்சி சார்பில் ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை மாநகராட்சியில் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி, மாநகர நல அலுவலர் ஆனிகுயின் மற்றும் தச்சநல்லூர் உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் ஆகியோர் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் நேற்று விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
தச்சநல்லூர் மண்டல பழைய வார்டுகளான 5,6,7,8,9,10, 39 ஆகிய பகுதிகளிலும், வண்ணார்பேட்டை பகுதிகளிலும் ஆட்டோக்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் என்ணை இணைப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இந்த பணியை மேற்பார்வையாளர் பெருமாள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் கணேஷ் முத்துக்குமார், சுரேந்திரா மற்றும் சூர்யா உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.
முன்னதாக இதுதொடர்பாக பயிற்சி முகாமும் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகம் சார்பில் துணை தாசில்தார் மாரி மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் பெருமாள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், டெங்கு தடுப்பு பணியாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.