வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விழிப்புணர்வு பிரசாரம்


வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விழிப்புணர்வு பிரசாரம்
x

தூத்துக்குடியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ உத்தரவின்பேரில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையத்தில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பொதுமக்களிடையே ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் செல்வபூபதி, தேர்தல் துணை தாசில்தார் கோபால், வருவாய் ஆய்வாளர் பழனிக்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பாலமுருகன், தீபலட்சுமி, திரேசம்மாள், பரமேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story