விழிப்புணர்வு பிரசார வாகனம்
விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட போலீஸ் துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். அப்போது விருதுநகர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்துள்ள போதிலும் தென்மண்டலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தான் இக்குற்றங்களில் ஈடுபட்டோருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளது என்றார். அப்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சூரியமூர்த்தி, மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா செய்திருந்தார்.
Related Tags :
Next Story