விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்


விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
x

தேனியில் உலக சைக்கிள் தினத்தையொட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தேனி

தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில், உலக சைக்கிள் தினத்தையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகரன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் குன்னூர் சுங்கச்சாவடி வரை சென்று அங்கிருந்து மீண்டும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.


Next Story