விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
வீரவநல்லூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ், பேரூராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், பேனர்களை அப்புறப்படுத்துதல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி தலைவர் சித்ரா, துணைத் தலைவர் வசந்த சந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பேரணியானது பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அலுவலகம் வந்தடைந்தது. இதில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை சைக்கிளில் கட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சுகாதார மேற்பார்வையாளர் பிரபாகர், வார்டு கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.