விழிப்புணர்வு சைக்கிள் பேரணி


விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி

தமிழ்நாடு அறிவியல் இயக்கமானது அறிவியலை மக்களுக்கு பரப்புவதை கடமையாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் அமைக்கப்பட்டு உள்ளது. இது மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்த உதவுகிறது.

இந்த வானவில் மன்றம் மூலம் தூத்துக்குடியில் உள்ள 12 ஒன்றியங்களிலும் மாணவ-மாணவிகளிடையே அறிவியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தூத்துக்குடியில் நேற்று நடந்தது. இந்த சைக்கிள் பேரணியை மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த சைக்கிள் பேரணி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.




Next Story