உடல் நலம் பேணுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி


உடல் நலம் பேணுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
x

மாவட்ட போலீசார் சார்பில் உடல் நலம் பேணுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட போலீசார் சார்பில் உடல் நலம் பேணுவதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தொடங்கி வைத்து சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார். இந்த பேரணி சர்ச் கார்னர், எம்.ஜி.ரோடு, திருக்காம்புலியூர் ரவுண்டானா, பஸ் நிலையம், லைட்ஹவுஸ் கார்னர், தாந்தோணிமலை வழியாக சென்று ஆயுதப்படை மைதானத்தில் நிறைவடைந்தது.

இதையடுத்து, பணி சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் போலீசாருக்கு யோகா பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி ஆயுதப்படை வளாகத்தில் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story