கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு
நீலகிரி
கோத்தகிரி
கோத்தகிரி புளூ மவுண்டன் நுகர்வோர் சங்கம் சார்பில் உலக நுகர்வோர் தினத்தையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நுகர்வோரின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் தலைவர் வாசுதேவன் துவக்கி வைத்தார். செயலாளர் முகமது சலீம், இணை செயலாளர் வினோபா பாப் ஆகியோர் தங்கத்தின் தரம், ஹால் மார்க் முத்திரை குறித்தும், நுகர்வோரின் உரிமைகள் குறித்தும் விளக்கி பேசினர். மக்கள் தொடர்பு அலுவலர் கிரேசி, பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள், சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதில் நுகர்வோர் சங்கத்தின் துணைத் தலைவர்கள் ஜெயந்தி, விக்டோரியா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை செயலாளர் கண்மணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story