மன உளைச்சலால் பாதித்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு


மன உளைச்சலால் பாதித்த மாணவர்களுக்கு விழிப்புணர்வு
x

மன உளைச்சலில் உள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மன உளைச்சலில் உள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது துணை போலீஸ்சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் பேசியதாவது:-

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேபோல மன உளைச்சலில் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

போதைப்பொருட்கள்

மேலும் பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருட்கள் விற்பனை நடைபெற்றால் தயங்காமல் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் பள்ளி, கல்லூரி வளாகத்திற்கு வருகை தந்தால் அல்லது பள்ளி, கல்லூரிகளுக்குள் மறைமுகமாக போதைப்பொருட்களை யாரேனும் விற்க வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

அப்போது தான் மாணவர்களை நாம் போதைப்பழக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story