நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கூட்டம்


நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கூட்டம்
x

மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் திருவண்ணாமலை கிளை சார்பாக நபார்டு வங்கி நிதி உதவியுடன் திருவண்ணாமலை அண்ணாசாலை அருகில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சேவைகள், கூட்டுறவு வங்கியின் சிறப்பு அம்சங்கள், திட்டங்கள் போன்றவை குறித்து நாட்டுப்புறக் கலைஞர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வங்கியின் உதவி பொது மேலாளர்கள் விஜயகுமார், கந்தசாமி, கணபதி, தனலட்சுமி, மேலாளர் துர்கா மற்றும் வங்கி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story